ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - காலை 11 மணி வரை 27.89% வாக்குகள் பதிவு

 
Erode

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காலை 11 மணி வரை 27.89 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. .திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இதேபோல் அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார்.  காலையிலேயே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது  ஜனநாயக கடமையை  ஆற்றி வருகின்றனர். பொதுமக்களைப் போன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் காலையிலேயே  தங்களது வாங்கினை செலுத்தியுள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்  ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். அதிமுக வேட்பாளர் தென்னரசு தனது வாக்கினை பதிவு செய்தார். இதேபோல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் உள்ளிட்டோரும் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். 

இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காலை 11 மணி வரை 27.89 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. முன்னதாக காலை 9 மணி நிலவரப்படி  10.10% வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இந்நிலையில், காலை 11 மணி நிலவரப்படி 27.89 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.