வழக்கத்தை விட அதிகமாக கொட்டி தீர்த்த கோடை மழை

 
Rain

தமிழ்நாட்டில் கோடை மழை மார்ச் 1 முதல் இன்று காலை வரை 115% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

பொதுவாக 81 மில்லி லிட்டர் அளவு இயல்பாக மழை பதிவாகும் நிலையில் இந்த ஆண்டு 124.1 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் சூரளக்கோடு பகுதியில் 8 சென்டிமீட்டர்,   பெருஞ்சாணி அணையில் 6  சென்டிமீட்டர் மழையும்,  புத்தன் அணையில் 6சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rain

வறட்டு பள்ளம் ,தேனி மாவட்டம் தேக்கடி, விருதுநகர், தென்காசி மாவட்டம் அடவிநயனார் கோயில் அணை ஆகியவற்றில் தலா 5 சென்டிமீட்டரும்,  ஸ்ரீவில்லிபுத்தூர் , திருநெல்வேலி களக்காடு,  நீலகிரி மாவட்டம் கூடலூர்,  குமரி மாவட்டம் பாலமோர் ஆகிய இடங்களில் தலா 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

rain
குறைந்தபட்சமாக ராஜபாளையம், தாராபுரம், திருநெல்வேலி ஒட்டன்சத்திரம், பொன்னமராவதி, முக்கடல் அணை, எடப்பாடி, மஞ்சளாறு, நாகர்கோவில், அம்மாபேட்டை ,நத்தம், நடுவட்டம், பென்னாகரம் ,நாங்குநேரி ஆகிய பகுதிகளில் 2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.