வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கூடுதல் அவகாசம் தேவை! - பாஜக துணைத்தலைவர் கரு.நாகராஜன்..!

 
1 1

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்த பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் தமிழக பாஜக சார்பில் மனு கொடுத்ததாக தெரிவித்தார்.

எஸ் ஐ ஆர் பணிகளின் போது பல காரணங்களால் சில கணக்கெடுப்பு படிவங்கள் BLO (வாக்காளர் நிலை அலுவலர்) மூலம் திரும்பப் பெறப்படாமல் இருக்க வாய்ப்புள்ளது.இதற்கு வாக்காளர்களின் அறியாமை, தகவல் பரவலில் ஏற்பட்ட குறைபாடுகள், தற்காலிகமாக வீட்டில் இல்லாத நிலை போன்ற காரணங்கள் இருக்கலாம்.

இந்த காரணங்களால் வரைவுப் பட்டியலில் இடம் பெறாதவர்கள், புதியதாக Form-6 மூலம் விண்ணப்பிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அதற்கான ஆதார ஆவணங்களை அரசு துறைகளில் இருந்து பெறுவது, தற்போது வழங்கப்பட்டுள்ள கோரிக்கை–எதிர்ப்பு கால அவகாசத்தை விட அதிக நேரம் எடுக்கும் நிலை உள்ளது.

80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், நோயாளிகள் மற்றும் ERO (தேர்தல் பதிவு அலுவலர்) முன் நேரில் ஆஜராக இயலாதவர்கள், ASD தொடர்பான நோட்டீஸ்களுக்கு பதிலளிக்கும் போது சிறப்பு கவனம், உதவி மற்றும் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட வேண்டியது அவசியம்.

 இந்நிலையில் தமிழகத்தில் எஸ் ஐ ஆர் நடவடிக்கைக்கு பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டபோது சுமார் 97 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டது. அதில் 26 லட்சம் பேர் இறந்தவர்கள், 4 லட்சம் பேர் இரட்டை பதிவு, 65 லட்சம் பேர் நிரந்தர இடம் மாறியவர்கள் என தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 
இதுவரை 12 லட்சம் பேர் மட்டுமே மீண்டும் தேர்தல் ஆணையத்திற்கு விண்ணப்பம் கொடுத்துள்ளனர்.