மாமியார் கொடுமை- 6 மாத குழந்தையுடன் கிணற்றில் குதித்த பெண்!

 
ய் ய்

வேதாரண்யம் அருகே மாமியார், மாமனார் கொடுமையால்  மருமகள் கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் கிராமத்தை  சேர்ந்தவர் சிவபாலன் (வயசு 33). கூட்டுறவு கடன் சங்கத்தின் தற்காலிக பணியாளராக பணியாற்றுகிறார். இவரது மனைவி காவியா (வயது 20). இவர்களுக்கு 6 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது . காவியா தனது கணவனுடன்  வீட்டில் வசித்து வந்தார். காவியாவின் மாமியார் செந்தமிழ்செல்வி  அரசு  பள்ளியில்  ஆசிரியராக உள்ளார். மாமனார் பழனித்துரை  ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர். இந்த நிலையில் மாமியார், மாமனார் தினத்தோறும்  மருமகளிடம் சண்டையிட்டு கொடுமை செய்துள்ளதாக தெரிய வருகிறது. இதனால் கணவன் சிவபாலன் தனது மனைவி காவியாவை அருகில் உள்ள அவரது தாயார் வீட்டில்கொண்டு போய் விட்டு உள்ளார்.

இந்த நிலையில் தயார் வீட்டில் தங்கி இருந்த காரியா நேற்று இரவு தனது  6 மாத குழந்தையை துப்பட்டாவால் தனது வயிற்றில் கட்டி கொண்டு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். வீட்டில் இருந்தவர்கள் காவியாவை காணாமல் தேடிய போது கிணற்றில் இருவரும் சடலமாக கிடந்தது தெரியவந்தது. உடனடியாக தீயணைப்பு துறையினர் உதவியுடன் இரண்டு உடல்களையும் மீட்டு வாய்மேடு போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்த போது காவியா இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார். அதில் தனது சாவுக்கு காரணம் மாமியார் மற்றும் மாமனார் ஆகியோர் தான் காரணம் என்றும் தனது கணவர் நல்லவர் அவர் என் சாவுக்கு காரணம் இல்லை எனவும், மாமனார் மாமியார் சண்டைபோட்ட  வீடியோவையும் பதிவிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடனடியாக போலீசார் மாமியார் செந்தமிழ்ச்செல்வியை கைது செய்தனர்.  தலைமறைவான மாமனார் பழனி துறையை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆயக்காரன்புலம் கிராமத்தில் 6 மாத குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.