2 குழந்தைகளுடன் செப்டிக் டேங்கில் குதித்த தாய்! பறிபோன குழந்தைகள் உயிர்

 
death death

வாழப்பாடி அருகே  குடும்ப தகராறில் இரண்டு குழந்தைகளுடன் தண்ணீர் தொட்டிக்குள் குதித்து தற்கொலை முயற்சித்த பெண்ணின் செயல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி வேனில் சிக்கி 2 வயது குழந்தை பலி | Tiruvannamalai News 2-year-old  child dies after getting stuck in school van


சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் நெடுசாலை அருகே அத்தனூர் பட்டி ஊராட்சியில் வசித்து வரும் விஜயகுமார் (வயது 35). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி இளவரசி (32)  இவர்களுக்கு விக்னேஷ் (6) சதீஷ்குமார் 3 ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். விஜயகுமார் கட்டிட வேலைக்கான சென்று விடுவதால் அப்பொழுது இளவரசி வீட்டருகே உள்ள ஒரு வாலிபருடன் பேசி வருவதாகவும், தகாத உறவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையறிந்த விஜயகுமாருக்கும் இளவரசியை கண்டித்ததாகவும், இதனால் அடிக்கடி  தகராறு ஏற்பட்டுவந்ததாக கூறப்படுகிறது.

நேற்று மாலை இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் விஜயகுமார் வெளியே சென்றதை அறிந்து இளவரசி தனது இரண்டு குழந்தைகளையும் வீட்ட அருகே உள்ள பயன்படுத்தப்படாத ஆழமான செப்டிக் டேங்க் தண்ணீரில் குழந்தைகளுடன் குதித்து தற்கொலை செய்து கொள்ள நின்றுள்ளார். அப்பொழுது இளவரசிக்கு பயம் வரவே அலறியுள்ளார். அப்பொழுது வீட்டருகே உள்ள உறவினர் பெண்ஓடி வந்து பார்க்கும் பொழுது தண்ணீரில் மூழ்கி நிலையில் கத்தியது தெரியவந்தது. உடனே அருகில் உள்ள ஒரு கயிறு மூலம் இளவரசியை மீட்டுள்ள பின்னர் இரண்டு குழந்தைகளும் உள்ளே இருந்தது தெரிய வந்தது. அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு பார்த்துள்ளனர், வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவர் பரிசோதித்த நிலையில் குழந்தைகள் இருவரும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

இது குறித்து தகவலின் பேரில் வாழப்பாடி டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையில், வாழப்பாடியின் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்பொழுது வீட்டு அருகே ஒரு வாலிபருடன் இளவாசி பேசி வந்ததால் ஏற்பட்ட தகராறில் இளவரசி குழந்தைகளுடன் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்ததில் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்ததால் இளவரசி மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.