தாய், தந்தைக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்த மகன்

 
ko

 உயிருடன் இருக்கும் பெற்றோர்களுக்கே கடைசி காலத்தில் அவர்களுக்கு சாப்பாடு போடாமல் விரட்டிவிடும் பிள்ளைகள் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் மறைந்த தாய், தந்தைக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தி ஊருக்கே விருந்து வைத்திருக்கிறார் ஒரு அதிசய இளைஞர்.

 கோவை மாவட்டத்தில் புளியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார்.   கட்டுமானத் தொழிலில் இருக்கும் இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரின் தாய் தந்தை மாரிமுத்து பாக்கியம் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்திருக்கிறார்.   அதனால்தான் அவர்களது மறைவை தாங்க முடியாமல் பொள்ளாச்சி அடுத்த தீபாலபட்டி கிராமத்தில் இரண்டு ஏக்கர் நிலத்தை வாங்கி,  கடந்த 2018ம் ஆண்டு அந்த நிலத்தில் தாய் தந்தைக்கு கோவில் கட்டி வைத்திருக்கிறார்.

ko

 அந்த சமயம் கொரோனா என்பதால் கோவிலில் கும்பாபிஷேகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.  இதையடுத்து தனது தாயின் இரண்டாவது நினைவு நாளான கடந்த 19 ஆம் தேதி அன்று கும்பாபிஷேகம் நடத்தி,   500க்கும் மேற்பட்டவர்களை அழைத்து விருந்து வைத்திருக்கிறார்.  இளைஞரின் இந்த செயலை கண்டு தாய் தந்தைக்கு கோவில் கட்டிய விவரம் சுற்றுவட்டாரத்தில் காட்டுத் தீயாகப் பரவ பல கிராமங்களிலிருந்தும் வந்து இந்த கோவிலை பார்த்து விட்டு செல்கின்றனர் மக்கள்.