2000 பேருக்கு வேலை! நிசான் நிறுவனம்-தமிழக அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

 
mk stalin and nissan mk stalin and nissan

சென்னை ஒரகடத்தில் இயங்கி வரும் நிசான் கார் தயாரிப்பு ஆலை விரிவாக்கத்திற்கான ஒப்பந்தமானது இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

சென்னை ஒரகடத்த்தில் நிசான் கார் தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இந்த நிறுவனம் தனது கார் தயாரிப்பு ஆலையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கான அந்த நிறுவனம் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. 

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நிசான் நிறுவனம்-தமிழக அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.  ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள ஹோட்டல் லீலா பேலஸில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று தமிழ்நாடு அரசுக்கும், நிசான் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்த பரிமாற்றம் நடைபெற்றது. சென்னை ஒரகடத்தில் இயங்கி வரும் நிசான் கார் தயாரிப்பு ஆலை விரிவாக்கத்திற்கான ஒப்பந்தமானது இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. ரூ.3,300 கோடி முதலீடு ஒப்பந்தம் மூலம் சுமார் 2000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.