ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கவேண்டும்!!

 
mp

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஊதியம் வழங்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.  ஒரு சில பிரிவினருக்கு 15 முதல் 20 நாட்களுக்குள் அளிக்கப்பட்டு வரும் ஊதியம் , சிலருக்கு இரண்டு மாதங்களாகியும் அளிக்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.  இந்த பிரச்சினை ராஜஸ்தான், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் ,பீகார், கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.

mp

குறிப்பாக ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரிந்ததற்கான ஊதியம் மற்ற பிரிவினரைக் காட்டிலும் ஜூன் மாதத்தில் தாமதமாக கிடைத்ததாக ஏராளமான புகார் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த மக்களுக்கு சரியாக எவ்வளவு நிதியுதவி அளிக்கப்படுகிறது என்பதை கண்டறியும் பொருட்டு மத்திய அரசு புதிய முறையை நடப்பாண்டு முதல் செயல்படுத்தி உள்ளது தான் இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. அத்துடன் இத்திட்டத்தின் கீழ் நிலுவையாக உள்ள ரூ.1,178 கோடியை விடுவிக்கக் கோரி தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.



இந்நிலையில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. பண்டிகை காலத்தில் மக்கள் உழைத்த உழைப்புக்கு ஊதியம் வராமல் கஷ்டப்படுகின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் 15 நாட்களுக்கு ஒருமுறை ஊதியம் வழங்கப்பட்டது.
உடனடியாக நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கவேண்டும் என்று மாண்புமிகு ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.