அனைவரும் சேர்ந்து ஒன்று கூடி இழுத்த தேர் தான் ஆதிச்சநல்லூர் அகழாய்வு - கனிமொழி எம்.பி.

 
Kanimozhi

அலெக்சாண்டர் ரியா அகழாய்வு மேற்கொண்ட நூறாண்டுகளுக்குப் பிறகு தற்போது நடைபெற்ற அகழாய்வில் தான் தங்கம் கிடைத்துள்ளது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

tn

ஆதிச்சநல்லூரில் ஆன்சைட் அருங்காட்சியகத்தை திறந்துவைத்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ஆதிச்சநல்லூரில் பரம்பு பகுதியில் கண்ட 2021 ஆம் ஆண்டு அகழாய்வு பணிகள் தொடங்கியது அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளை ஆவணப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன . ஆதிச்சநல்லூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் ஓரத்தில் 5 ஏக்கரில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில்  இந்தியாவில் ஐந்து இடத்தில் மியூசியம் அமைக்கும் பணியில் முதன்முதலாக ஆதிச்சநல்லூரில் சைட் மியூசியம் அமைக்கப்பட்டு திறப்பதற்காக தயாரானது. அந்த வகையில் ஆதிச்சநல்லூரில் ஆன்சைட் அருங்காட்சியகத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்.

kanimozhi

இந்நிலையில் ஆதிச்சநல்லூரில் கனிமொழி எம்.பி.  செய்தியாளர்களை சந்தித்த நிலையில், "நம் மூதாதையர்களின் வாழ்வியல் மற்றும் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்ளும் வகையில் ஆதிச்சநல்லூர் அகழாய்வு நடைபெற்றுள்ளது;
 
அலெக்சாண்டர் ரியா அகழாய்வு மேற்கொண்ட நூறாண்டுகளுக்குப் பிறகு தற்போது நடைபெற்ற அகழாய்வில் தான் தங்கம் கிடைத்துள்ளது;

மத்திய அரசு, தமிழ்நாடு அரசு, எழுத்தாளர்கள் என அனைவரும் சேர்ந்து ஒன்று கூடி இழுத்த தேர் தான் ஆதிச்சநல்லூர் அகழாய்வு;

இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பாரட்டும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமையும்" என்றார்.