“என் தந்தை நலமாக இருக்கிறார்”- கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், குஜராத்தின் சபர்மதி ஆசிரமத்தில் இருந்தபோது மயங்கி விழுந்த நிலையில், 'தனது தந்தை நலமாக இருப்பதாக' கார்த்தி சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.
குஜராத்தில் நடந்துவரும் காங்கிரஸ் தேசிய மாநாட்டில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சோர்வடைந்து காணப்பட்ட ப.சிதம்பரத்தை கட்சி நிர்வாகிகள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவர் திடீரென மயக்கமடைந்ததால் நிர்வாகிகள் தூக்கி சென்று குஜராத்திலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். வெயில் காரணமாக அவர் மயங்கிவிழுந்ததாக கூறப்படுகிறது.
My father is fine & is being examined by doctors.
— Karti P Chidambaram (@KartiPC) April 8, 2025
My father is fine & is being examined by doctors.
— Karti P Chidambaram (@KartiPC) April 8, 2025
இந்நிலையில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், “என் தந்தை நலமாக இருக்கிறார்... மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.