"பித்தம் தெளிய சித்தமருத்துவத்தில் மருந்துண்டு ஆளுநரே!" - எம்.பி. சு.வெங்கடேசன் காட்டம்!!

 
mp

பித்தம் தெளிய சித்தமருத்துவத்தில் மருந்துண்டு ஆளுநரே! என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து குறித்து சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.

MKstalin rn ravi

சமீபத்தில் சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழகத்தில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதற்கான சட்ட மசோதா   நிறைவேற்றப்பட்டது. பின்னர் அந்த மசோதா  ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இந்த மசோதாவை பரிசீலனை செய்த ஆளுநர் ஆர்.என்.ரவி,  சித்தா பல்கலைக்கழக மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மசோதாவானது பல்கலைக்கழக மானிய குழு விதிகளுக்கு எதிராக  இருப்பதாக ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில்  விளக்கமளித்துள்ளார்.



rn ravi

இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், உத்திரபிரதேசத்தில் இரு பல்கலைக்கழகங்களுக்கு  அம்மாநில முதல்வர் வேந்தராக உள்ளார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் சித்தமருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தராகலாம் என்பது “விதிகளுக்கு முரணானது.” என்கிறார் ஆளுநர். பித்தம் தெளிய சித்தமருத்துவத்தில் மருந்துண்டு ஆளுநரே!" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.