வைகோவுடன் திருமாவளவன் சந்திப்பு

 
tn

வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்து தொல். திருமாவளவன்  வாழ்த்து தெரிவித்தார். 

vaiko

 

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்பு தேர்தல் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி நடைபெற்றது. தலைமை கழக நிர்வாகிகள் . ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் , தணிக்கை குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஒன்றாம் தேதி நடைபெற்ற நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீண்டும் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் , அத்துடன் அவை தலைவராக ஆடிட்டர் அர்ஜுனராஜ் தேர்வு செய்யப்பட்ட நிலையில் , பொருளாளராக செந்தில் அதிபன் , முதன்மைச் செயலாளராக துரை வைகோ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  கூடுதலாக எந்த பொறுப்புக்கும் மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்பதால்  போட்டியின்றி இவர்கள் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது மீண்டும் ம்திமுகவின் பொதுச்செயலாளராக வைகோ தேர்வு செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

tn

இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று சந்திப்பினை நிகழ்த்தினார் .மதிமுக பொதுச் செயலாளர் திருமாவளவன் நேரில் வாழ்த்து கூறியுள்ளார்.