பைங்குடில் வளி - திருமாவளவன் கேள்விக்கு அமைச்சர் அஸ்வினி குமார் பதில்!!

 
thiruma

பைங்குடில் வளி குறித்து நாடாளுமன்றத்தில் எம்.பி. தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பிய நிலையில் அமைச்சர் அஸ்வினி குமார் பதிலளித்துள்ளார். 

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், (அ) ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையேயான குழு வழங்கியிருக்கும் சமீபத்திய ரெட் அலர்ட் எச்சரிக்கை பற்றி அரசாங்கம் அறிந்திருக்கிறதா? (ஆ) ஆம் எனில், அதன் விவரங்கள்; (இ) நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக பைங்குடில் வளி க்களை அரசாங்கம் குறைத்துள்ளதா? (ஈ) ஆம் எனில், அதன் விவரங்கள்; (இ) இல்லை எனில், புவி வெப்பமடைதலை தடுத்திடும் வகையில் பைங்குடில் வளிக்களை குறைத்திட ஏதேனும் திட்டம் உள்ளதா? நாட்டின் உயிர்க்கோளம், வளிமண்டலம் மற்றும் பனிமண்டலம் ஆகியவற்றில் மனிதனால் உருவாக்கப்படும் மாசுபாடுகளை குறைத்திட திட்டம் ஏதேனும் உள்ளதா?மேற்கண்ட கேள்விகளை நாடாளுமன்றத்தில் எழுப்பியிருந்தேன் அதற்கு ஒன்றிய அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே  பின்வருமாறு பதிலளித்துள்ளார்:

thiruma

(அ) மற்றும் (ஆ) இந்த விவகாரம் அரசின் கவனத்தில் உள்ளது. தற்போது ஆறாவது மதிப்பீட்டு சுழற்சியில் உள்ள காலநிலை தொடர்பான அரசுகளுக்கிடையேயான குழு (IPCC) 2021 ஆகஸ்ட் மாதத்தில் “காலநிலை மாற்றம் 2021: இயற்பியல் அறிவியல் அடிப்படை” என்ற தலைப்பிலும் மற்றும் பிப்ரவரி 2022ல் “காலநிலை மாற்றம் 2022: தாக்கம், தழுவல் மற்றும் பாதிப்புகள்” என்ற தலைப்பிலும் அறிக்கை வெளியிட்டது. வளர்ந்த நாடுகள் முக்கிய பொறுப்பை ஏற்கின்றன, தங்கள் நாடுகளில் கடுமையான உமிழ்வை குறைப்பதற்கு துரிதமாக முன்னிற்கின்றன. தீர்வின் ஒரு பகுதியாக மட்டும் தான் இருப்பதை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது.

காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பிலும் (UNFCCC), மற்றும் அதன் கியோட்டோ புரோட்டோகால் (KP), மற்றும் பாரிஸ் ஒப்பந்தத்திலும் (PA) இந்தியா ஒரு உறுப்பாக இருக்கிறது. UNFCCCல் இந்தியா தேசிய தகவல் தொடர்பு மற்றும் ஈராண்டுக்கு ஒருமுறை மேம்பட்ட அறிக்கையை சமர்ப்பிக்கிறது, இதில் தேசிய பசுமை இல்ல வாயு (GHG) கையிருப்பு பற்றியும் குறிப்பிடப்படுகிறது. இந்தியாவின் இரண்டாவது BUR படி, 2014 இல் இந்தியாவின் பசுமை இல்ல 06.4.2022 வாயு (GHG) வெளியேற்றம் உட்பட நிலப் பயன்பாடு, நிலப் பயன்பாட்டு மாற்றம் மற்றும் வனவியல் (LULUCF) 2306.3 மில்லியன் டன் CO2e மற்றும் மூன்றாவது BUR இன் படி, 2016 இல் இந்தியாவின் நிகர GHG உமிழ்வு CO2e 2531.07 மில்லியன் டன்களாக இருந்தது. வளரும் நாடாக இருப்பதால், இந்தியாவின் உமிழ்வுகள், UNFCCCன் படி, அதன் சமூக மற்றும் வளர்ச்சி தேவைகளை பூர்த்தி செய்ய வளர்ச்சியடையும். இருப்பினும், இந்தியாவின் மொத்த உமிழ்வுகளின் வளர்ச்சியை படிப்படியாக குறைப்பதற்கான முயற்சியைக் கடைப்பிடித்ததால், உள்நாட்டு உற்பத்தி (GDP) 2005 மற்றும் 2016க்கு இடையில் உமிழ்வின் தீவிரம் 24% குறைந்துள்ளது.


சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மற்றும் காற்றுமாசுபாடு, கழிவு மேலாண்மை , காடுகளின் சீரழிவு, பல்லுயிர் இழப்பு மற்றும் நிலம்/மண் சீரழிவுகள் போன்ற பிரச்சனைகளுக்கு விளம்பர மற்றும் சட்ட நடவடிக்கைகள் மூலம் தீர்வு காண அரசு முயற்சிக்கிறது. மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் பல்வேறு திட்டங்கள் மற்றும் பல்வேறு அமைச்சகங்கள்/துறைகளால் இதற்கான விளம்பர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது . மேலும், காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1981, சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986; வன (பாதுகாப்பு) சட்டம், 1980; வன உயரினங்கள் (பாதுகாப்பு) சட்டம், 1972; இந்திய வனச் சட்டம், 1927; உயிரியல் பன்முகத்தன்மை சட்டம், 2002; இழப்பீட்டு காடு வளர்ப்பு நிதி சட்டம், 2016; மற்றும் அவ்வப்போது திருத்தப்பட்ட இந்த சட்டங்கள் & விதிகள் மற்றும் அறிவிப்புகள் மூலம் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றன,

மேலும், காற்றுமாசு, காடுகளின் சீரழிவு, பல்லுயிர் இழப்பு மற்றும் நிலம்/மண் சீரழிவு போன்றவற்றுக்கு எதிராக போராட அரசு பின்வரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது: 2024க்குள் PM10 மற்றும் PM2.5 செறிவுகளில் 20 முதல் 30 சதவீதம் குறைக்கும் இலக்குடன் விரிவான முறையில் காற்று மாசுபாடு பிரச்சனையை கையாளும் வகையில் ஜனவரி 2019 இல் தேசிய சுத்தமான காற்று திட்டத்தை (NCAP) அமைச்சகம் தொடங்கியுள்ளது. குறிப்பிட்ட நகர சுத்தமான காற்று செயல்திட்டங்கள்' தயாரிக்கப்பட்டு 132 நகரங்களில் நடைமுறைப்படுத்த தயாராக உள்ளன. திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2016ன் படி, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகள் திடக்கழிவு செயலாக்கத்தின் கட்டுமானம், செயல்பாடு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை மேற்கொள்ளலாம். மேலும், அதனுடன் தொடர்புடைய உள்கட்டமைப்புகள் மூலமாகவோ, சொந்தமாகவோ அல்லது தனியார் துறை பங்கேற்புடனோ திடக்கழிவின் பல்வேறு கூறுகளை உகந்த முறையில் பயன்படுத்துவதற்கு தொழில்நுட்பங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரைப்படி வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் அவ்வப்போது வெளியிடுகிறது.

thiruma

தேசிய காடு வளர்ப்பு திட்டம், பசுமை இந்தியா திட்டம், நீர்நிலை மேம்பாடு பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாயீ யோஜனா (PMKSY) உள்ளிட்ட பலத்திட்டங்களை 26 மில்லியன் ஹெக்டேர் பாழடைந்த நிலத்தை மீட்டெடுத்து சீரமைக்கும் நோக்கத்துடன் அரசு தொடங்கியுள்ளது. இது காடுகளையும் பல்லுயிர் பெருக்கத்தையும் பாதுகாக்க உதவும், இயற்கை வளங்களைப் பாதுகாத்து கார்பன் மூழ்கிகளை மேம்படுத்தும். உயிரியல் பன்முகத்தன்மை மாநாட்டிற்குபின்னர் உயிரியல்பன்முகத்தன்மை சட்டம், 2002 இயற்றப்பட்டது.பல்லுயிர், அதன் கூறுகளின் நிலையான பயன்பாடு மற்றும் நியாயமான சமமான பகிர்வு ஆகியவற்றின் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டது. இந்த பயன்பாட்டிலிருந்து எழும் நன்மைகள் ஏபிஎஸ் என அழைக்கப்படுகிறது. இச்சட்டம் மூன்று அடுக்கு பொறிமுறை அமைப்பு மூலம் செயல்படுத்தப்படுகிறது. அதாவது தேசிய பல்லுயிர் ஆணையம் (NBA) தேசிய அளவில், மாநில அளவில் மாநில பல்லுயிர் வாரியங்கள், மற்றும் பல்லுயிர் மேலாண்மை உள்ளாட்சி மட்டக் குழுக்கள் என செயல்படுகிறது.