அணுக்கழிவுகளை சேமித்து வைக்க வழங்கிய அனுமதியை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும்!

 
tr baalu

அணுக்கழிவுகளை சேமித்து வைக்க வழங்கிய அனுமதியை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்று 
எம்.பி.,டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார். 

கூடங்குளத்தில் அணுமின் நிலையம் இயங்கி வரும் நிலையில் அங்கேயே  அணுக்கழிவு  சேமிப்புமையம் உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது பேராபத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் கூடங்குளம் அணுமின் நிலையத்திலேயே அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு ஸ்ரீபெரும்புதூர் திமுக எம்.பி. டி ஆர் பாலு கடிதம் எழுதியுள்ளார்.

ttn

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சேமிக்கப்படும் அணுக்கழிவுகளை அங்கேயே சேமித்து வைக்க மத்திய அரசின்  இந்திய அணுசக்தி கழகம் கடந்த ஜூலை  7ஆம் தேதி அனுமதி அளித்தது. இது வேதனை அளிக்கக் கூடிய ஒன்று. இந்திய அணுசக்தி கழகம் அளித்த அனுமதி உச்சநீதிமன்ற உத்தரவை மீறுகிறது. கூடங்குளம் அணுமின் நிலையம் தொடங்கும்போது அணுக்கழிவுகள் ரஷ்ய அனுப்பப்படும் என்று எடுக்கப்பட்ட முடிவை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

balu

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 1, 2 ,3 ,4 ஆகிய அணு உலைகளில் சேமித்து வைத்துள்ள கழிவுகளை ரஷ்யாவுக்கு அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் அணுசக்தி கழகத்தின் உத்தரவை திரும்பப் பெறுவதுடன் கல்பாக்கத்தில் உள்ள அணு கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.  சென்னை, புதுச்சேரி மற்றும் தென் தமிழகத்தில் அதிக மக்கள்  வசிப்பதால் அணுக்கழிவுகளை முன்னுரிமை அளித்து அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.