அரசியல் கட்சியினருக்கு வழங்கிய வாக்காளர் பட்டியலில் பாகம் எண், தொலைபேசி எண் இல்லை- விஜயபாஸ்கர்

 
vijayabaskar vijayabaskar

அரசியல் கட்சியினருக்கு வழங்கிய வாக்காளர் பட்டியலில் பாகம் எண், தொலைபேசி எண் இல்லை என மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மனு வழங்கினார்.

Former Minister M.R. Vijayabaskar petitioned High Court seeking  anticipatory bail, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு  ஐகோர்ட்டில் மனு


கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தங்கவேலுவை சந்தித்து முன்னாள் அமைச்சரும், அதிமுக கரூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் சட்டமன்றத் தொகுதியில் படிவம் 9, 10 மற்றும் 11-ன் சுருக்கப் பட்டியல்களில் முழுமையற்ற தரவுகள் உள்ளது என புகார் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் திருத்தம் எஸ்ஐஆர் பணிகள் மேற்கொண்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளிவந்த பிறகு 01.01.2026 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் முகவரி மாற்றம் படிவம் 6, 7, 8 வழங்க தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதில் கொடுத்த படிவங்களை அந்தந்த அரசியல் கட்சியைச் சேர்ந்த பிஎல்ஏ 2 அது தொடர்பான பட்டியல் கேட்கப்பட்டது முகவரி மட்டும் அதில் பதிவிடப்பட்டிருந்தது. ஆனால் அவர்களுடைய செல்போன் எண்கள், எந்த பாகம் எண் இல்லை. இதை கண்டுபிடிப்பதற்கு பெரிதும் சிரமமாக உள்ளது.

நான்கு தொகுதியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகிறார்கள். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளோம். இந்திய தேர்தல் ஆணையம், சென்னை தலைமை தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளித்துள்ளோம். மாவட்ட ஆட்சியரிடம் பாகம் எண் மற்றும் செல்போன் எண்கள் இல்லை எனவும் சேர்த்தல் நீக்கப்பட்டுள்ளார்களா, சேர்க்கப்பட்டுள்ளார்களா என்பது தெரியவில்லை. தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் 30ஆம் தேதி வரை நீட்டித்துள்ளனர். புகார் கொடுப்பதற்கு கடைசி தேதி 30.1.2026 வரை மாவட்ட ஆட்சியர் கூறுகிறார். ஆனால், 30-ஆம் தேதி பத்து ஓட்டுகளை சேர்க்க முயற்சித்தால் கண்டுபிடித்து புகார் கொடுப்பது எப்படி என கேள்வி எழுப்பினார். இறுதி வாக்காளர் பட்டியல் தேதி 17.2.2026 சேர்த்தல், இறந்தவர்களை நீக்குதல் உள்ளிட்டவைகளை வெளிவரும் என தெரிவித்தனர். ஆனால், அதற்கு முன்பாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளிவருமா என கேள்வி எழுப்பிய நிலையில், ஒரு அதிகாரி நேரம் இருந்தால் வரும். இல்லையென்றால் வராது என மற்றொரு அதிகாரி தெரிவித்ததாகவும், இறுதி வாக்காளர் பட்டியல் வரும் பட்சத்தில் ஆளும் திமுக கட்சியைச் சேர்ந்தவர்கள் வாக்காளர்களை சேர்த்தினால் எப்படி கண்டுபிடிப்பது. படிவம் 6-ல் முகவரி மட்டுமே உள்ளது. அவர்களின் பாகம் எண் மற்றும் செல்போன் எண்கள் இல்லை என குற்றச்சாட்டு தெரிவித்தார்.