Mr.28 பைசா... பிரதமர் மோடிக்கு செல்ல பெயர் வைத்த உதயநிதி..!

 
1

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ராமநாதபுரம், தேனியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் “நாம் ஒரு ரூபாய் வரி கட்டினால் அதிலிருந்து ஒன்றிய அரசு 28 பைசாவை மட்டுமே திரும்ப தருகின்றனர். அதனால் தற்போது மோடிக்கு நான் புதிதாக ஒரு பெயர் வைத்துள்ளேன். இனி பாரத பிரதமர் அவர்களை 28 பைசா என்றுதான் அழைக்க வேண்டும்” என  கடுமையாக விமர்சித்தார்.  

இந்த தேர்தல் மூலம் மாநில உரிமைகளை மீட்க வேண்டும். ஏனென்றால் கடந்த 10 ஆண்டுகளுக்கு நம்முடைய மாநில உரிமைகள் அத்தனையையும் மத்திய பா.ஜ.க. அரசிடம் அ.தி.மு.க. அடிமைகள் அடகு வைத்து விட்டார்கள். மத்திய அரசு கடந்த 5 வருடத்தில் தமிழ் வளர்ச்சிக்கு எந்த நிதியும் வழங்கியது இல்லை.இந்த 5 வருஷத்தில் வரியாக 6.30 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு கட்டி இருக்கிறோம். மத்திய அரசுக்கு கொடுக்கக்கூடிய ஒரு ரூபாய் வரி கட்டினோம் என்றால் மத்திய அரசு நமக்கு 28 பைசா மட்டுமே திருப்பி தருகிறது. ஒவ்வொருவருக்கும் வெறும் 28 பைசா தரும் பிரதமர் நரேந்திர மோடியை 28 பைசா மோடி என தான் அழைக்க வேண்டும்

பிரதமருக்கு உண்மையான அக்கறை இருந்தால் மிக்ஜாம் புயல், தூத்துக்குடி வெள்ளத்தின் போது ஏன் வரவில்லை என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய உதயநிதி “ தேர்தல் வந்திருப்பதால் மட்டுமே பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்திருக்கிறார். உங்களுக்கு உண்மையான அக்கறை இருந்தால் மிக்ஜாய் புயலின் போது வந்திருக்க வேண்டும். அதே போல் தூத்துக்குடி, திருநெல்வேயில் ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்தது. யாராவது வந்து எட்டி பார்த்தார்களா” என்று கேள்வி எழுப்பினார்.

பாஜக அரசு எல்லா உரிமைகளை பறிக்க பார்க்கின்றனர். தமிழகத்தில் குழந்தைகளின் எதிர்காலத்தை அழிக்க தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. புதிய கல்விக்கொள்கை மூலம் தமிழை அழித்துவிட்டு சமஸ்கிருதம், ஹிந்தி மொழியை திணிக்க பார்க்கின்றனர். புதிய கல்விக் கொள்கை வந்துவிட்டால் 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு மாணவர்களும் பொதுத்தேர்வு எழுத வேண்டும்.

நாடு முழுவதும் நீட் தேர்வு அமலுக்கு வந்தாலும், தமிழ்நாட்டில் ஜெயலலிதா இருந்தவரைக்கும் நீட் தேர்வு நுழையவில்லை. ஆனால், தற்போது அமலில் உள்ள நீட் தேர்வால் அரியலூரைச் சேர்ந்த அனிதா தொடங்கி கடந்த ஆண்டு சென்னையில் ஜெகதீசன் என்ற மாணவன் வரை 28 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். I.N.D.I.A. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும. 

பாராளுமன்ற தேர்தலுக்குப் பின் மகளிர் உரிமைத் தொகையில் உள்ள குறைகள் நீக்கப்பட்டு அனைவருக்கும் ரூபாய் ஆயிரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.ஐ.பி.எல். அணிகளை போல அ.தி.மு.க.வில் எடப்பாடி அணி, ஓ.பி.எஸ். அணி, ஜெ.தீபா அணி, ஜெ.தீபா டிரைவர் அணி என பல அணிகள் உள்ளது.

இந்த முறை இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி கொடுத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.