முதுமலை தம்பதி: நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்..

 
முதுமலை தம்பதி: நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்..

'The Elephant Whisperers' ஆவண குறும்படம் ஆஸ்கர் வென்ற நிலையில், அதில் இடம்பெற்றுள்ள முதுமலையைச் சேர்ந்த பொம்மன் - பெள்ளி தம்பதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

ஆசியாவின் பழமையான யானைகள் பராமரிப்புக் காப்பகமான  முதுமலை புலிகள் கப்பகத்தில் , குட்டி யானைகளை பராமரிக்கும் முதுமலை தம்பதியைப் பற்றி ஆவண குறும்படம்  ஆஸ்கர் விருது பெற்றிருக்கிறது.  'The Elephant Whisperesrs'எனும் அந்தப் படத்தை குனெட் மொன்கோ தயாரிப்பில் கார்த்தகி குன்செல்வெஸ் இயக்கினார்.  கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ரகு, பொம்மிக்குட்டி என்ற இரண்டு குட்டி யானைகளை பராமரிப்பது குறித்து ஆவண குறும்படம் தயாரிக்கப்பட்டது.  இந்த ஆவண குறும்படம்   இந்திய தயாரிப்பில் முதல் முதலில் ஆஸ்கர் வென்ற படம் என்ற பெருமையை 'The Elephant Whisperesrs' பெற்றுள்ளது.

முதுமலை தம்பதி

இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்ததன் பேரில், முதுமலையில் இருந்து மைசூரு வழியாக பாகன் மனைவி பெல்லியை கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான வருவாய்த்துறையினர் சென்னைக்கு நேற்று அழைத்து வந்தனர். இதேபோல் தாய் யானைகளை இழந்த குட்டி யானைகளை வனப்பகுதிக்கு விரட்டும் பணிக்காக சென்றிருந்த பொம்மனும் , தருமபுரியில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து முதுமலை தம்பதி பொம்மன் - பெல்லி வாழ்த்து பெற்றனர். அப்போது அவர்களுக்கு சால்வை அணிவித்து முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.