பாமக இளைஞர் சங்கத்தலைவர் பதவியில் இருந்து முகுந்தன் விலகல்!
May 29, 2025, 12:39 IST1748502585733
பாமக இளைஞர் சங்கத்தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாசுக்கு முகுந்தன் ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக முகுந்த அன்புமனி ராமதாசுக்கு அனுபியுள்ள கடிதத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணியான பாட்டாளி இளைஞர் சங்கத்தின் தலைவராக கடந்த 28.12.2024 ஆம் நாளில் நான் நியமிக்கப்பட்டேன். சொந்த காரணங்களுக்காக அந்தப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன். மருத்துவர் அய்யா அவர்கள் தான் என்றென்றும் எனது குலதெய்வம். மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகிய தாங்கள் தான் எங்கள் எதிர்காலம் என்ற உணர்வுடன் தொடர்ந்து கட்சிப் பணியாற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


