முல்லைப் பெரியாறு என்பது நதியல்ல; தமிழ்நாட்டின் ரத்த ஓட்டம் - வைரமுத்து பதிவு

 
vairamuthu vairamuthu

முல்லைப் பெரியாறு எங்கள் தாய்ப்பால்; தாயின் மார்பகத்தை  அறிந்தோ அறியாமலோ அரிந்து விடாதீர்கள் என்று வைரமுத்து வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து தனது சமூகவலைத்தள பக்கத்தில், 
முல்லைப் பெரியாறு
என்பது நதியல்ல;
தமிழ்நாட்டின் ரத்த ஓட்டம் 

'வையை என்னும்
பொய்யாக் குலக்கொடி' என்று
சிலப்பதிகாரம் பாடிய
ஜீவநதிக்குக்
கல்லறைகட்ட விடமாட்டோம்

mullai

வரலாறு மற்றும்
புவியியல் அடிப்படையில்
முல்லைப் பெரியாறு மீது
தமிழர்களுக்குத் தார்மீக
உரிமை இருக்கிறது

தமிழ்நாட்டரசு 
மற்றும்
உச்ச நீதிமன்றத்தின்
ஒப்புதல் இல்லாமல்
அணைகட்ட முடியாது என்ற
சட்ட உரிமையும் எமக்கிருக்கிறது

ஐந்து மாவட்டங்கள்
நெல்லற்றுப் புல்லற்றுப்
பாலைவனமாக விடமாட்டோம்


கேரளத்தை மதிக்கிறோம்
ஆனால்
முல்லைப் பெரியாற்றைத்
துதிக்கிறோம்

முல்லைப் பெரியாறு 
எங்கள் தாய்ப்பால்;
தாயின் மார்பகத்தை
அறிந்தோ அறியாமலோ
அரிந்து விடாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.