முள்ளிவாய்க்கால் நினைவு தினம் - தவெக அனுசரிப்பு
May 18, 2025, 11:06 IST1747546562763
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

2009 ஆண்டு மே 16,17, 18 ஆகிய நாட்கள் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அந்த ஈகையினரின் தியாகத்தை போற்றும் வகையில் தஞ்சை விளார் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று 15வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுவதை ஒட்டி, தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணிக்கு, உயிரிழந்த ஈழத் தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் நடத்தவும், மாவட்ட செயலாளர்கள் இதற்கான பணிகளை மேற்கொள்ளவும் தவெக தலைமை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


