நீட் மூலமாக பிழைப்பவர் யார்? பலியாகுபவர் யார்? - முரசொலி கேள்வி

 
neet

அமலாக்கத்துறையால் விசாரணைக்கும், சொத்து முடக்கத்திற்கும் ஆளான 'லாட்டரி' ஏஜெண்டிடம் இருந்து பாஜக 100 கோடி ரூபாய் நிதி நன்கொடை பெற்றுள்ளதை, நீட் கோச்சிங் சென்டர்கள் பல இலட்சம் கோடி ரூபாய் வசூல் வேட்டை நடத்துவதுடன் பொருத்திப் பார்த்தால் நீட் தேர்வு எனும் பெயரில் பிழைப்பவர்கள் யார்? பலியானவர்கள் யார் என்பது புரியும் என முரசொலி நாளிதல் தலையங்கம் வெளியிட்டுள்ளது. 

முரசொலி நாளிதளில் வெளியான தலையங்கத்தில்,  2019 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி நாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு கல்விக் குழுமத்தின் நீட் கோச்சிங் சென்டர்களில் வருமானவரித்துறை ரெய்டு நடந்தது. இந்த கோச்சிங் சென்டரின் சென்னை, நாமக்கல், ஈரோடு, கரூர் ஆகிய கிளைகளில் ஒவ்வொரு வருடமும் சுமார் 1500 மாணவர்கள் நீட் பயிற்சி பெற்றிருக்கின்றனர். ஒரு மாணவருக்கு ரூ.1,50,000 வரை கட்டணமாக வசூலித்ததாகச் சொல்லப்பட்டது.


தோராயமாக கணக்கிட்டாலே 22 கோடி ரூபாய் ஓராண்டுக்கு ஒரே ஒரு பயிற்சி மையத்துக்கு மட்டும் கிடைத்துள்ளது. மற்ற மையங்கள் எவ்வளவு திரட்டி இருக்கும்? இப்படி தமிழ்நாடு முழுவதும் திரட்டப்பட்டது எவ்வளவு? இந்தியா முழுவதும் திரட்டப்பட்டது எவ்வளவு? என்பதை கணக்கிட்டால்தான் இதற்குள் விளையாடும் பணத்தின் மதிப்பு தெரியும். நீட் தேர்வு மூலமாக பிழைப்பவர் யார்? அதற்காக பலியாகுபவர்கள் யார் என்பதை இதன் மூலமாக அறியலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.