பிற்பகலில் தகனம் செய்யப்படுகிறது முரசொலி செல்வம் உடல்..!

 
பிற்பகலில் தகனம் செய்யப்படுகிறது முரசொலி செல்வம் உடல்..!

மறைந்த முரசொலி செல்வம் உடலுக்கு இன்று பிறபகலில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.  பெசன்ட் நகர் மின் மயானத்தில்  தகனம் செய்யப்பட உள்ளது. 

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் முரசொலி செல்வம்(84). இவர் முன்னாள்  முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின்  சகோதரி மகனும், முரசொலி மாறனின் தம்பியும் ஆவார்.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி மு.க.செல்வியின் கணவரும் ஆவார்.  முரசொலி நாளிதழுடன் 50 ஆண்டுகள் தொடர்பு கொண்டிருந்த முரசொலி செல்வம் பெங்களூருவில் நேற்று  காலமானார். முரசொலிக்கு கட்டுரை எழுதுவதற்காக குறிப்பு எடுத்து வைத்துவிட்டு கண்ணயர்ந்த நேரத்தில் மாரடைப்பால் உயிர் பிரிந்தது.  

பிற்பகலில் தகனம் செய்யப்படுகிறது முரசொலி செல்வம் உடல்..!

 இதனையடுத்து நேற்று மாலை அவரது உடல் சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் , திரைப்பிரபலங்களும், பத்திரிக்கையாளர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அப்போது மைத்துனர் முரசொலி செல்வத்தின் உடலை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கதறி அழுதார்.  அவரை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் படுத்தினார். 

தொடர்ந்து கணவரின் உடலை பார்த்து கதறி அழுத சகோதரி செல்விக்கு , கைகளைப்பிடித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.  இந்நிலையில் மறைந்த முரசொலி செல்வம் உடலுக்கு இன்று பிற்பகலில் இறுதிச்சடங்குகள் செய்யப்படுகிறது. கோபாலபுரம் இல்லத்திலிருந்து  அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்பட உள்ளது.