தகாத உறவால் ஏற்பட்ட பிரச்சனையில் நடந்த கொலை- குழந்தையின் சடலத்தை தோளில் சுமந்து சுற்றிய தாய்

 
ச் ச்

கடலூரில் இறந்த குழந்தையுடன் சாலையில் சுற்றி திரிந்த தாய்யின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை கொலை செய்யபட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்துடன் உறவினர்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

ச்


குழந்தை சடலத்தை தோளில் சுமந்து சுற்றிய தாய்  கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கே.ஆடூர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (45) இவரது மனைவி பச்சையம்மாள். இவர்களுக்கு இரண்டு ஆண், இரண்டு பெண் என நான்கு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் பாலமுருகனுக்கு கடந்த மாதம் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பச்சையம்மாளின் சித்தப்பா மகனான திண்டிவனத்தை சேர்ந்த ஜீவா என்பவர் ஆடூர் கிராமத்திற்கு வந்து பச்சையம்மாள் மற்றும் 3 குழந்தைகளை அழைத்துக்கொண்டு தன் சொந்த ஊருக்கு சென்று அவர் வீட்டில் வைத்துள்ளார். 

பாலமுருகனின் உறவினர்களிடம் நேற்று தொடர்பு கொண்ட ஜீவா தான் வீட்டில் இருந்த 4 வயது பெண் குழந்தை ரோஷினி இறந்து விட்டதாகவும், தாங்கள் கடலூருக்கு பஸ்ஸில் வருவதாகவும் கூறியுள்ளார். இதனால் பாலமுருகன் மற்றும் அவரது உறவினர்கள் கடலூர் பேருந்து நிலையத்திற்கு வந்து பச்சையம்மாளின் வருகைக்காக காத்திருந்தனர். நீண்ட நேரமாகியும் அவர்கள் அங்கு வரவில்லை. இதனால் பாலமுருகன் உறவினர்கள் கடலூர் பகுதியில் தேடிப் பார்த்தபோது பச்சையம்மாள் கடலூர் உழவர் சந்தை அருகே குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் கையில் வைத்திருந்த குழந்தை உடலில் காயங்களுடன் இறந்த நிலையில் இருந்தது. இதனால் பாலமுருகனின் உறவினர்கள் பச்சையம்மாளை கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதை பார்த்த போலீசார் குழந்தையை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பச்சையம்மாளிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தையை ஜீவா தான் அடித்துக் கொலை செய்து இருக்க வேண்டும் என்று பாலமுருகனின் உறவினர்கள் குற்றம் சாட்டினர். குழந்தை மரணம் குறித்து தாய் பச்சையம்மாளிடம் கடலூர் போலீசார் நடத்திய விசாரணையில் தகாத உறவால் ஏற்பட்ட பிரச்சினையில் குழந்தை அடித்து கொல்லப்பட்டதாக தாய் வாக்குமூலம் அளித்துள்ளார்.