திரிஷ்யம் பட பாணியில் கொலை.. பிணத்தை மறைக்க கொலையாளி செய்த காரியம்..!

 
1 1

புனேவை சேர்ந்தவர் சமீர் ஜாதவ். இவரது மனைவி அஞ்சலி சமீர் ஜாதவ் (38). இந்த தம்பதிக்கு 2017ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அஞ்சலி சமீர் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  சமீர் ஜாதவ் ஆட்டோமொபையில் டிப்ளமோ படித்து முடித்த அவர், கராஜ் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அக்டோபர் 26 ஆம் தேதி, ஜாதவ் தனது மனைவி அஞ்சலியை  ஒரு கிடங்கிற்கு அழைத்துச்  சென்றுள்ளார். புதிய கிடங்கை காட்ட விரும்புவதாக கூறி, அவர் மனைவியை அழைத்து சென்றுள்ளார். அப்போது, அந்த கிடங்கிற்குள் வந்ததும், மனைவி அஞ்சலியை, அவரது கணவர் சமீர்,  கழுத்து நெரித்து கொன்றுள்ளார். 

பிறகு சடலத்தை எரித்து சாம்பலை அங்கிருந்த ஆற்றில் வீசினார். கொலைக்குப் பிறகு அஞ்சலியின் போன் மூலமாக அவருடைய நண்பருக்கு ஐ லவ் யூ என்று குறுஞ்செய்தி அனுப்பி பதிலையும் தானே அளித்து, அஞ்சலி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக போலீ ஆதாரங்களை திரட்டி உள்ளார். சம்பவம் நடந்த நேரத்தில் இந்த தம்பதியின்  குழந்தை தீபாவளிக்காக  ஊருக்கு சென்றிருந்தனர். 

மனைவியை கொலை செய்த சமீர், தனது மனைவி காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அளித்ததோடு மட்டுமில்லாமல், அடிக்கடி காவல்நிலையத்திற்கு  மனைவியை எப்போது கண்டுபிடித்து தருவீர்கள் என பலமுறை கேட்டு வந்துள்ளார். 


 சமீரின் தொடர்ச்சியான கேள்வி, சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்கள் போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் தீவிர விசாரணைக்கு பிறகு சமீர் மனைவியை கொலை செய்ததாக அவர் ஒப்புக் கொண்டார்.  

47 வயதான சமீர்  திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்தது தெரியவந்துள்ளது.ஆனால், தனது மனைவி வேறொரு ஆணுடன் உறவில் இருந்ததாகவும், இதனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.   இதனால், தான் மனைவியை கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனாலும், திட்டப்படி மனைவியின் மீது சந்தேகத்தை ஏற்படுத்த, அஞ்சலியின் செல்போனில்  இருந்து தனது நண்பர்களில் ஒருவருக்கு ஐ லவ் யு என மெசேஜ் அனுப்பியுள்ளார். அதற்கு தானே பதிலையும் அவர் அளித்துள்ளார்.  காவல்துறை விசாரணையில் இதனையே அவர் ஆதாரமாக காட்டி நம்ப வைக்க முயன்றுள்ளார். ஆனால், இவரது திட்டம் அனைத்து வீணாகிவிட்டது. அதே நேரத்தில், இவர் கமல் நடித்த பாபநாசம்(திரிஷ்யம்) படத்தை 4 முறை  பார்த்து தான், மனைவியை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் அவர் கூறினார்.இது தொடர்பாக தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.