இன்று முருக பக்தர்கள் மாநாடு.. களைகட்டிய மதுரை..

 
  இன்று முருக பக்தர்கள் மாநாடு.. களைகட்டிய மதுரை..     இன்று முருக பக்தர்கள் மாநாடு.. களைகட்டிய மதுரை..  

மதுரையில் இன்று முருக பக்தர் மாநாடு நடைபெறுவதை ஒட்டி,  போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.   

 பாஜக மற்றும்  இந்து முன்னணி சார்பில் மதுரையில் இன்று (ஜூன் 22)   முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது.  மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள்  வந்த வண்ணம் உள்ளனர்.   மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை மாநாடு நடைபெற உள்ள நிலையில்,   இந்த மாநாட்டுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து 5 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.  

  இன்று முருக பக்தர்கள் மாநாடு.. களைகட்டிய மதுரை..  

இதற்காக முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரி வடிவில் மாநாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி கோயில்களில்  ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். முன்னதாக நேற்று  காலை ஆளுநர் ஆர்.என்.ரவி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரும் கூட சாமி தரிசனம் செய்தனர். இந்த மாநாட்டில்  மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண்,  இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக மாநில் தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் ஹெச்.ராஜா மற்றும் மடாதிபதிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்கின்றனர்.

nainar nagendran
இந்த மாநாட்டில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசம் பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  மாநாட்டை ஒட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து  பாஜகவினர் மற்றும் இந்து முன்னனியினர் வாகனங்களில் மதுரைக்கு வரத் தொடங்கிவிட்டனர். சுமார் 10,000 வாகனங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுவதால்  வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடிநீர் , தற்காலிக கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாநகர காவல் ஆணையர் லோக நாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ஆகியோர் தலைமையில் 1,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரையில்  பொதுமக்கள் இடையூன்றி செல்வதற்கும் சில வழித்தட போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.