முருகனை வழிபட வந்த இடத்தில் பறிபோன உயிர்! திருத்தணியில் சோகம்

 
Death Death

திருத்தணியில் முருகன் கோயிலுக்கு தைப்பூசத்தில் சாமி தரிசனம் செய்ய வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த பாபு என்பவர் மாரடைப்பால் திடீரென மரணமடைந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் தைப்பூச நிகழ்ச்சி  விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஆர்.சி. மங்கலம் பகுதியைச் சேர்ந்த பாபு (34) தச்சு வேலை செய்கிறார். இவர் தனது 10-வயது மகனுடன் சாமி தரிசனத்திற்கு திருத்தணி பஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து அவர் மலைக் கோயிலுக்கு செல்வதற்கு முன்பு சன்னதி தெருவில் செல்லும் பொழுது திடீரென்று பாபுவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு சாலையில்  மயங்கி விழுந்துள்ளார். அங்கு இருந்த ஆட்டோக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு மருத்துவர்கள் பாபுவின் உடலை சோதனை செய்த பின்பு அவர் மாரடைப்பால் இறந்துவிட்டார் என்று தெளிவுபடுத்தினர் 

இதனை அடுத்து அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் பாபுவின் உடலைப் பார்த்து கதறி அழுத்த சம்பவம் மருத்துவமனைக்கு வந்த பொதுமக்கள் கண்களில் கண்ணீர் வரும் நிலையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து திருத்தணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.