பள்ளி, கல்லூரிகளில் அதிகரிக்கும் பாலியல் துன்புறுத்தல்! தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு
அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் Internal Complaints Committee அமைக்கப்படும் என தலைமைச் செயலாளர் முருகானந்தம் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு அரசின் அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம், தலைமையில் இன்று (02.09.2024) பள்ளி, கல்லூரிகளில் பாலியல் பிரச்சினைகளை தடுப்பது குறித்து அனைத்து பள்ளி/ கல்வி நிறுவன முதல்வர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் மதிவாணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவர் மணிமொழி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம், “அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் Internal Complaints Committee அமைக்கப்படும், பள்ளி, கல்லூரிகளிலும் புகார்களை அளிக்க புகார் பெட்டிகள் அமைக்க வேண்டும். மகளிர் தங்கும் கல்லூரி விடுதிகளில் வெளி ஆட்கள் பணிகளுக்காக வந்தால் அவர்களுடன் கல்லூரியைச் சேர்ந்த பெண் பணியாளர் ஒருவருடன் இருந்து கண்காணிக்க வேண்டும். அனைத்து கல்லூரிகளிலும் காவலர் ஒருவரை நியமித்து அங்கு நடக்கும் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை உடனடியாக காவல்துறையிடம் கொண்டு செல்ல வேண்டும்,
பள்ளி, கல்லூரி வளாகங்களில் போதைப் பொருள் நடமாட்டத்தை அறவே ஒழித்திட காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அறிவுறுத்தினார்.