என்றும் அன்பின் பாதையில் பயணிக்கும் தமிழ்ப்புயல் - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

 
tn

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் , அமைச்சர் உதயநிதி வாழ்த்து கூறியுள்ளனர்.

Income tax department issues notice to A.R.Rahman of routing income to his foundation

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், இசையால் உலகையும் உள்ளங்களையும் வென்று, என்றும் அன்பின் பாதையில் பயணிக்கும் தமிழ்ப்புயல்  @arrahman அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார். 


அதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , துள்ளல் இசையாலும் - தூய்மையான தமிழுணர்வாலும் நம்மை ஆட்கொண்டிருக்கும் இசைப்புயல் @arrahman சாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல்நலத்தோடு இன்னும் பற்பல ஆண்டுகள் அவரது இசைப்பயணம் தொடரட்டும் என்று தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.