விஜய் தலைமையில் தவெக அரசு அமைய வேண்டி மெக்காவில் பெண்கள் பிரார்த்தனை

 
ச் ச்

சவுதி அரேபியாவின் மெக்காவில் இஸ்லாமிய பெண்கள், தமிழ்நாட்டில் தலைவர் விஜய் தலைமையில் தவெக அரசு அமைவதற்காக பிரார்த்தனை செய்தனர்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.  கூட்டணி பேச்சுவார்த்தை, கட்டியை வலுப்படுத்துவது, வாக்குச்சாவடி முகவர்களை நியமிப்பது,  களத்திற்குச் சென்று மக்களை சந்திப்பது என சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகின்றன.  அந்தவகையில் கடந்த ஓன்றரை ஆண்டுக்கு முன்பு புதிதாக கட்சி தொடங்கி, 2026  சட்டமன்ற தேர்தலில் களம் காணவுள்ள  நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.   


இந்நிலையில் இஸ்லாமியர்களின் புனித தலமான சவுதி அரேபியாவின் மெக்காவிற்கு சென்ற முஸ்லிம் பெண்கள், தமிழ்நாட்டில் தவெக அரசு அமைய வேண்டி பிரார்த்தனை செய்தனர். புனித தலத்திலிருந்து தங்கள் ஆசீர்வாதங்களையும் நல்வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்வதாகவும் அவர்கள் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. பிரார்த்தனையில் ஈடுபட்டது திருநெல்வேலியைச் சேர்ந்த பெண்கள் என்பது தெரியவந்துள்ளது.