சென்னையில் மேலும் 10 இடங்களில் 'முதல்வர் படைப்பகம்'- அமைக்கும் பணிகள் தொடக்கம்

 
முதல்வர் படைப்பகம் முதல்வர் படைப்பகம்

சென்னையில் மேலும் 10 இடங்களில் முதல்வர் படைப்பகம் அமைப்பதற்கான பணிகளை தமிழ்நாடு  அரசு தொடங்கியுள்ளது.

ரூ.2.85 கோடியில் 'முதல்வர் படைப்பகம்' - சென்னை கொளத்தூரில் மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார் | Muthalvar Padaippagam in chennai - hindutamil.in


தமிழக அரசு சார்பில் சென்னை கொளத்தூரில் ரூ.2.85 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ‘முதல்வர் படைப்பகம்’ என்ற பகிர்ந்த பணியிட மையத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக அறிவார்ந்த சூழலை உருவாக்கும் வகையில், சென்னை கொளத்தூரில் அமக்கப்பட்ட  முதல்வர் படைப்பகம் இளைஞர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.


இந்நிலையில், சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் முதல்வர் படைப்பகம்  அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில அறிவித்து இருந்தார். இதன்படி,  சென்னையில் மேலும் 10 இடங்களில் முதல்வர் படைப்பகம் அமைப்பதற்கான பணிகளை தமிழ்நாடு  அரசு தொடங்கியுள்ளது. இதன்படி, திருவல்லிக்கேணி ஜானி பாட்சா சாலை, பாரதி சாலை, அண்ணாநகர், காந்தி நகர் உள்ளிட்ட இடங்களில் பணிகளை சிஎம்டிஏ தொடங்கியுள்ளது. மேலும், அயனாவரம், பக்தவச்சலம் பூங்கா, சுப்புராயன் தெரு, மங்களாபுரம் ஆகிய நான்கு இடங்களில் முதல்வர் படைப்பக கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறையாக.. ஸ்டாலின் துவங்கி வைத்த சூப்பர் திட்டம்..!! |  What is Mudhalvar Padaipagam? How Tamilnadu Govt owned Co working space  benefit State's Economy - Tamil Goodreturns


இது போன்று, அமைந்தகரை, கொரட்டூர் புத்தகரம், பெரியமேடு கண்ணப்பர் திடல், திருவெற்றியூர் நெடுஞ்சாலை நான்கு இடங்களில் சென்னை மாநகராட்சி அமைக்க உள்ளது. இதைத் தவிர்த்து, கோவை, மதுரை, திருச்சி, சேலம், தாம்பரம் மற்றும் ஆவடி உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் விரைவில் முதல்வர் படைப்பகங்கள் உருவாக்கப்பட உள்ளது