நடிகர் நாசர் தந்தை மாபுப் பாஷா மறைவுக்கு முத்தரசன் இரங்கல்

 
mutharasan mutharasan

நடிகர் நாசர் தந்தை மாபுப் பாஷா மறைவுக்கு முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் நாசரின் தந்தை காலமானார்

இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திரைப்படக் கலைஞரும், திரைப்பட நடிகர் சங்கத்தின் முன்னணி தலைவருமான நாசரின் தந்தையார் திரு மாபுப் பாஷா (95) நேற்று (10.10.2023) காலமானார் என்ற செய்தி கேட்டு ஆழ்ந்த வேதனை அடைந்தோம்.

நகை மெருகேற்றும் தொழில் செய்து வந்த மாபுப் பாஷா தனது மகன் நாசர் நல்ல திரைப்படக் கலைஞராக வர வேண்டும் என்பதற்கு அரும்பாடு பட்டுள்ளார். தந்தையின் உணர்வை புரிந்து முன்னேறிய நாசர் தந்தைக்கு புகழ் சேர்த்துள்ளார்.

mutharasan

வயது மூப்பின் காரணமாக மறைந்த மாபுப் பாஷா அவர்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது மகன் நாசருக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது. என்று குறிப்பிட்டுள்ளார்.