அவ்வையார் விருது பெற்ற படைப்பாளர் பாமாவுக்கு முத்தரசன் வாழ்த்து

 
mutharasan

அவ்வையார் விருது பெற்ற படைப்பாளர் பாமாவுக்கு முத்தரசன் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

tn
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் , சமூக சீர்திருத்தம் மற்றும் பாலின சமத்துவம் சார்ந்து செயல்பட்டு வரும் சமூக செயல்பாட்டாளார்களுக்கு தமிழ்நாடு அரசு ஆண்டு தோறும் சர்வதேச பெண்கள் தினத்தில்  அவ்வையார் விருது கொடுத்து பாராட்டி, ஊக்கப்படுத்தி வருகிறது.

mutharasan

இந்த ஆண்டு (2024) பெண்ணிய பிரச்சினைகளை முன் வைத்தும், பாலின சமத்துவத்தை வலியுறுத்தியும் இலக்கியம் வழியாக பல படைப்புகளை வழங்கி வரும் எழுத்தாளர் பாமா என்கிற பாஸ்டினா சூசை ராஜ்  அவர்கள் அவ்வையார் விருது பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விருது பெற்ற எழுத்தாளர் பாமா அவர்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.என்று குறிப்பிட்டுள்ளார்.