"மகளிர் உரிமைத்தொகை திட்டம் மீதே எனது முழு கவனம் உள்ளது" - முதல்வர் ஸ்டாலின்

 
stalin

மகளிருக்கு எந்த சிக்கலும் இன்றி உரிமைத் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 33 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். அந்நிகழ்ச்சியில் பேசிய  முதல்வர் ஸ்டாலின், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., என்பது மிகவும் கடமை பொறுப்புமிக்க பதவிகளாகும், இத்தகைய உயர்பதவிகளுக்கு உங்களை உயர்த்தியவர்களை வாழ்க்கையில் எந்நாளும் மறக்காதீர்கள். உங்களை நாடி வரும் ஏழை எளிய மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது.துடிப்பும், ஆர்வமும் கொண்டவர்களாக பணியாற்ற வேண்டும்.

MK Stalin

மகளிர் உரிமைத்தொகை திட்டம் மீதே எனது முழு கவனம் உள்ளது. எந்த சிக்கலும் இல்லாமல் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். யாருக்கெல்லாம் உரிமைத்தொகை அவசியமோ, அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கும் .அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் .

stalin

தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைச் செப்டம்பர் 15ம் தேதி முதல் செயல்படுத்த உள்ளோம்;  1 கோடி மகளிருக்கு மாதம்தோறும் ₹1000 வழங்க இருக்கிறோம்; மகளிருக்குப் பொருளாதார வலிமை ஏற்படுத்தும் திட்டமாக இதனை வடிவமைத்துள்ளோம் என்றார்.