எனது தாயை அவமதித்துவிட்டனர்: பிரதமர் மோடி வேதனை..!

 
Q Q

அரசியலுக்கு அப்பாற்பட்ட எனது தாயை அவமதித்து விட்டனர் என்று பிரதமர் மோடி வேதனை தெரிவித்தார்.

காங்கிரஸ், ஆர்.ஜே.டி. நடத்திய கூட்டத்தில் எனது தாயை அவமதித்து விட்டனர். அரசியலுக்கு அப்பாற்பட்ட எனது தாயை அவமதித்து விட்டனர் என்று பிரதமர் மோடி வேதனை தெரிவித்தார். பீகாரில் ஒவ்வொரு தாயும் எதிர்க்கட்சியினரின் வசை பேச்சால் புண்பட்டுள்ளனர். ஆர்.ஜே.டி., காங்கிரஸ் கட்சியினர், மறைந்த எனது தாயை வைத்து அரசியல் செய்கின்றனர். எதிர்க்கட்சியினர் இந்த அளவுக்கு அரசியல் செய்வார்கள் என்று நான் கற்பனைகூட செய்ததில்லை. பீகாரில் ஒவ்வொரு தாயிடமும் ஆர்.ஜே.டி., காங்கிரஸ் கட்சியினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினார்.