விளம்பரம் பார்த்தால் பணம் எனக் கூறி மோசடி- My V3 Ads சக்தி ஆனந்தன் ஜாமீன் மனு தள்ளுபடி

 
விளம்பரம் பார்த்தால் பணம் எனக் கூறி மோசடி- My V3 Ads சக்தி ஆனந்தன் ஜாமீன் மனு தள்ளுபடி 

விளம்பரம் பார்த்தால் பணம் எனக் கூறி, மோசடி செய்த வழக்கில் கோவையைச் சேர்ந்த my v3 ads என்ற செயலி நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தனின் ஜாமீனில் விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

my v 3 ads செயலியில் வீடியோ பார்த்தால் 5 ரூபாய் முதல் 1500 ரூபாய் சம்பாதிக்கலாம் என கூறி வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்ததாக கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சென்னை பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் ஜாமின் கோரி அதன் உரிமையாளர் சக்தி ஆனந்தன் தாக்கல் செய்த மனுவை அண்மையில் நிதிநிறுவன மோசடி வழக்ககளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது. 

இதனையடுத்து ஜாமின் கோரி சக்தி ஆனந்தன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி T.V. தமிழ்செல்வி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மேகநாதன், சக்தி ஆனந்தனால் 69 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மோசடி பல கோடி ரூபாய் சம்பந்தப்பட்ட து, இவர் தான் பிரதான குற்றவாளி எனவும் கூறினார். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார். எனவே சக்தி ஆனந்தனுக்கு ஜாமின் வழங்க கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சக்தி ஆனந்தனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.