ஈரோட்டில் பெண் வேட்பாளரை களமிறக்கும் சீமான்!

 
ச் ச்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழிர் கட்சி சார்பில் சீதாலெட்சுமி போட்டியிடுகிறார்.

பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த பத்தாம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. சனி, ஞாயிறு  விடுமுறையை தொடர்ந்து இரண்டாம் நாளாக வேட்பு  மனு தாக்கல் நடைபெற்றது. காலை 11 மணிக்கு தொடங்கி மூன்று மணி வரை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான மனிஷ் வேட்பு மனுக்களை பெற்றார். கடந்த பத்தாம் தேதி, முதல் நாளில் மூன்று சுயேட்சைகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் இரண்டாம் நாளான நேற்று 6 சுயேட்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். 

தொடர்ந்து பொங்கல் விடுமுறை தினங்கள் வருவதால், வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளான 17-ம் தேதி ஒருநாள் மட்டும் மனு தாக்கல் செய்ய அவகாசம் உள்ளது. இந்நிலையில் நாம் தமிழிர் கட்சி சார்பில் சீதாலெட்சுமி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. சீதாலட்சுமி (முதுகலை ஆய்வியல் நிறைஞர் (M.A, M.Phil.,) படித்தவர். கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.