நாம் தமிழர் கட்சியினரை கொத்தாக தூக்கிய தவெக
நாகை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.

விஜயின் மாநாட்டைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்திற்கும், நாம் தமிழர் கட்சிக்கும் கருத்து மோதல் நிலவி வருகிறது. இதன் காரணமாக சீமானுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள அக்கட்சியின் நிர்வாகிகள் பலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர். அதன்படி நாகையில் நூற்றுக்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று இணைந்தனர்.

தமிழக வெற்றி கழகத்தின் நாகை மாவட்ட செயலாளர் சுகுமாரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தெற்கு பொய்கைநல்லூர் வடக்கு பொய்கை நல்லூர், ஒரத்தூர், செல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். நாகையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது நாம் தமிழர் நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


