“அருந்ததியர் சமூகத்தினரை வந்தேரிகள் என சீமான் பேசுகிறார்”- கோவையில் நா.த.க கூண்டோடு விலகல்

 
ச்

கோவையில் நாம் தமிழர் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் ராமசந்திரன் தலைமையில் நிர்வாகிகள் வெளியேறுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

Seeman

நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கட்சியில் இருந்து கூண்டோடு வெளியேறுவதாக அறிவித்துள்ளனர்.அருந்ததிய சமூகத்தினரை வந்தேரிகள் என சீமான் பேசுவதால் களத்தில் உள்ள கட்சியினருக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது. கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் நாம் தமிழர் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மகளிரணி செயலாளர் அபிராமி,  வடக்கு மாவட்ட வணிகர் பாசறை செயலாளர் செந்தில்குமார், வடக்கு மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ஏழுமலை பாபு ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்திதனர். 

அப்போது பேசிய மாவட்ட செயலாளர் ராமசந்திரன், “நாம் தமிழர் கட்சியின்  வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் நாம் தமிழர் கட்சியில் இருந்து  வெளியேறுகின்றோம், வடக்கு மாவட்டத்தில் இருந்து 20 நிர்வாகிகள் மொத்தமாக வெளியேறுகின்றோம். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானின் முரணான பேச்சுளால் கட்சியில் இருந்து வெளியேறுகின்றோம்.  கொள்கை ரீதியாக இல்லாமல் செயல்பாடுகள் இருக்கின்றது. கொங்கு மண்டலத்தில்  அருந்ததியர்களை வந்தேறி என்கின்றார். இதில் உடன்பாடு இல்லை. மேலும்  சீமானின் செயல்பாடுகள் கொள்கைக்கும் , நடைமுறைக்கும் மாற்றாக இருக்கின்றது, கொங்கு மண்டலத்தில்  நாம் தமிழர் கட்சியில் இருந்து யாரை தொடர்பு கொள்வது என்பதே தெரியவில்லை. எந்த கட்சியில் இணைவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்ய வில்லை.

seeman

தென் மாவட்டத்தில் இரு சமூகங்களுடையே பிளவுபடுத்தும் வகையில் சீமான் பேசுகின்றார். கொங்கு மண்டலத்தில் அருந்தியரை வந்தேறிகள் என்கின்றார். இது போன்ற செயல்பாடுகளில்  உடன்பாடு இல்லை. நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகள் வெற்றியை நோக்கிய பயணமாக இல்லை. சீமானை விட விஜய் பெரிய ஆள் கிடையாது, அவர் பின்னால் செல்லவேண்டியது இல்லை. சீமானின் பேச்சு, கருத்தியலை பார்த்து கட்சிக்கு  வந்தோம், ஆனால்  அவரது செயல்பாடு அப்படி இல்லை. இரு வருடங்களாக தலைமையிடம் அதிருப்தியை சொல்லி கொண்டே இருக்கின்றோம் , ஆனால்  நான் எடுப்பதுதான் முடிவு, இருந்தால் இருங்கள் இல்லா விட்டால் போங்கள் என்கின்றனர். அதனால் வெளியேறுகிறோம். திமுக, அதிமுக போன்ற கட்சி குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள் , எங்கள் குடும்பத்தினேரே  எங்களை  நம்பி வருவதில்லை. ரஜினியை சந்தித்தது அவரது தனிப்பட்ட செயலாக இருக்கும் 

கட்சியில் இருந்து  வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் மட்டும் வெளியேறுகின்றோம். நாம் தமிழர்  கட்சியில் பாதிக்கு பாதி பெண்களுக்கு உரிமை கொடுக்கின்றார். அதில் எந்த பிரச்சினையும் இல்லை, இரு வருடங்களாக கட்சி நிர்வாகிகளின் கருத்தை கேட்பதில்லை, தமிழகம் முழுவதும் கட் சியில் தலைமை மீது அதிருப்தியில் இருக்கின்றனர். கொங்கு மண்டலத்தில் மாற்று மொழி பேசுபவர்கள் அதிகம் இருக்கின்றனர். இங்கு அதை வைத்து அரசியல் செய்ய முடியவில்லை. ராஜீவ்காந்தி, கல்யாண சுந்தரம் போன்ற இரண்டாம் கட்ட தலைவர்கள் இருந்த போது குறைகளை தீர்க்க முயன்றார்கள். இப்போது  நாம் தமிழர் கட்சியில் அதுபோல யாரும் இல்லை. தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்கின்றனர். அதனால் அடுத்தடுத்து வெளியேறுகின்றனர்” என தெரிவித்தனர்.