இளைஞர்களின் கனவுகளை நினைவாக்கும் திட்டம் ‘நான் முதல்வன்’ திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பூரிப்பு

 
stalin

ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு இறுதி முடிவுகளை யுபிஎஸ்சி நேற்று வெளியிட்டது.  196 பேர் வெவ்வேறு பணிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  அகில இந்திய அளவில் முதல் மூன்று இடங்களை மாணவர்கள் பெற்றுள்ளனர் . அகில இந்திய அளவில் மாணவர் ஆதித்யா  ஸ்ரீ வத்சவா முதலிடத்தையும் , அனிமேஷ் பிரதான் இரண்டாம் இடத்தையும் , டோனுரு அனன்யா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

tnpsc

 41-வது இடத்தில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த புவனேஷ் ராம் பெற்றுள்ளார்.  இவர் தமிழக அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளார் . அகில இந்திய அளவில் 78வது பிடித்துள்ள டாக்டர் எஸ். பிரசாத் தனது முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் . இவர் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்.

TNPSC

 இந்நிலையில் தமிழக மாணவர்கள் 42 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  நான் முதல்வன் திட்டம் என் கனவு திட்டம் மட்டும் அல்ல;  நம் இளைஞர்களின் கனவுகளை நினைவாக்கும் திட்டம் என பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.  கல்லூரி மாணவர்களின் தொழில் திறனை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசால் நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.