கடலில் பேனா நினைவு சின்னம் அமைத்தால் மீன்பிடி தொழில் பாதிக்கப்படும்- பாஜக

 
nainar nagendran

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்கு கடலில் தான் பேனா சின்னம் வைக்க வேண்டும் என்ற தேவை இல்லை என பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

pen

மறைந்த முன்னாள் முதல்வரும் திமுகவின் தலைவருமானவர் கருணாநிதி அவர்களின் இலக்கியப் பணிகளை போற்றுகின்ற வகையில் சென்னை மெரினாவில் அவரது நினைவிடத்திற்கு அருகே கடலில் எண்பத்தி ஒரு கோடி ரூபாய் செலவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு எடுத்திருக்கிறது.

மெரினா கடற்கரையில் இருக்கும் கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் மெரினா  நடுக்கடலில் இந்த பேனா சிலையை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சிலை அமைந்துள்ள பகுதிக்கு செல்ல கடற்கரையில் இருந்து 650 மீட்டர் நீளத்திற்கு கண்ணாடியிலான மேம்பாலமும் அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.   இந்த பாலம் நிலத்தின் மீது 290 மீட்டரும் கடலில் மீது 360 மீட்டர் அமையும் வகையில் கட்டப்பட இருக்கின்றன. அரசு செலவில் 81 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் இந்த பேனா சிலைக்கு கலைஞர் பேனா நினைவுச் சின்னம் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பும், சிலர் ஆதரவும் தெரிவித்துவருகின்றனர். 

இந்நிலையில் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்ற குழு தலைவரும் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், “கருணாநிதி பேனா நினைவு சின்னத்தை கடலில்தான் பேனா சின்னம் வைக்க வேண்டும் என்ற தேவையில்லை. வேறொரு இடத்தில் நிறுவலாம். கடலில் பேனா சின்னம் அமைத்தால் மீன்பிடி தொழில் பாதிக்கப்படும். அதிகமான செலவு ஏற்படும், அதற்கு மாற்றாக அதே செலவில் வேறொரு இடத்தில் பேனா சின்னத்தை நிறுவலாம்” எனக் கருத்து தெரிவித்துள்ளார்.