அதிமுக கூட்டணி குறித்து தொண்டர்கள் எந்த கருத்தும் சொல்ல கூடாது - நயினார் நாகேந்திரன்

 
Nainar Nainar

அதிமுக கூட்டணி குறித்து தொண்டர்கள் எந்த கருத்தும் சொல்லக் கூடாது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். 

தமிழகத்தில் மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி அமைத்துள்ளது. தமிழகத்திற்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூட்டணியை உறுதி செய்தார்.  அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித் ஷா கூறியிருந்தார். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி அரசு தான் அமையும், கூட்டணி ஆட்சி இல்லை என கூறினார். இதேபோல் அதிமுக நிலைப்பாடு குறித்து கட்சி தலைமை அனுமதி பெறாமல் பேட்டி கொடுக்க வேண்டாம் என நிர்வாகிகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார். 

இந்த நிலையில், அதிமுக கூட்டணி குறித்து தொண்டர்கள் எந்த கருத்தும் சொல்லக் கூடாது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், அதிமுக கூட்டணி குறித்து கருத்து சொல்ல வேண்டாம். தயவு செய்து எந்த கருத்தும் சொல்லாதீர்கள் என கேட்டுக் கொள்கிறேன். கூட்டணி விவகாரங்களை எல்லாம் தலைமை பார்த்துக் கொள்ளும் என கூறினார்.