அதிமுக - பாஜக கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம்: நயினார் நாகேந்திரன்

 
நயினார் நாகேந்திரன் நயினார் நாகேந்திரன்

பாஜகவுடன் 1999-ஆம் ஆண்டு திமுக கூட்டணி வைத்தது, அப்போது பாஜகவிற்கு அவர்கள் தமிழ்நாட்டை அடகு வைத்தார்களா? அதிமுக- பாஜக சந்தர்ப்பவாத கூட்டணியல்ல, காங்கிரசும் திமுகவும் இயற்கையான கூட்டணியா? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். 

செங்கல்பட்டில்  செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “முதலமைச்சருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் அதிமுக- பாஜக கூட்டணியை, சந்தர்ப்பவாத கூட்டணி என பேசி வருகிறார். தமிழகத்தில் 234 தொகுதிகள் உள்ளன. அதில் நூற்று முப்பது தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றால் தான் ஆட்சி அமைக்க முடியும், அதனை மக்கள் தான் முடிவு செய்ய முடியும், நானே தான் முதல்வராக வருவேன் எனக் கூறுவது சர்வாதிகாரம் போல் உள்ளது. பாஜகவுடன் 1999-ஆம் ஆண்டு திமுக கூட்டணி வைத்தது, அப்போது பாஜகவிற்கு அவர்கள் தமிழ்நாட்டை அடகு வைத்தார்களா? அதிமுக- பாஜக சந்தர்ப்பவாத கூட்டணியல்ல, காங்கிரசும் திமுகவும் இயற்கையான கூட்டணியா?உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், கூட்டணி கட்சியின் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் என்ன முடிவெடுக்கிறார்களோ அது நடக்கும். தேவையில்லாமல் சந்தேகங்களை எழுப்பி, எழுப்பி இந்த கூட்டணியை பிளவுப்படுத்தும் முயற்சியை கைவிடுங்கள். எங்களை பொறுத்தவரை திமுக ஆட்சியை அகற்ற வேண்டும்” என்றார். 

பாஜக தொண்டர்கள் கலியுக எம்ஜிஆர் என்றெல்லாம் பேனர்கள் வைக்கக் கூடாது. நாங்களெல்லாம் எம்ஜிஆர் ரசிகர்களாக வளர்ந்து வந்துள்ளோம். தொடர்ந்து உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் என எம்ஜிஆர் பாடலை பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாடி காட்டினார்