“விஜய்க்கு இப்போதுதான் விசில்... இனிமேல் ட்ரம் தான்”- நயினார் நாகேந்திரன்

 
நயினார் நயினார்

நடிகர் விஜய்க்கு இப்பொழுது தான் விசில் அடிக்க ஆரம்பித்திருக்கிறது இனிமேல் நாங்கள் மொத்தமாக சேர்ந்து ட்ரம் அடிப்போம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

நயினார்

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “திமுக ஆட்சியில் கஞ்சா நிறைந்த தமிழ்நாடு தான் இருக்கிறது. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்துள்ளார்கள். கடந்தாண்டு பொங்கலுக்கு பணம் கொடுக்கவில்லை அதுக்கு முந்தைய ஆண்டும் பணம் கொடுக்கவில்லை. இந்த ஆண்டு தேர்தலுக்காக பணம் கொடுத்துள்ளார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு 28ஆம் தேதி வர இருப்பதாக இருந்தது. தற்பொழுது அந்த தேதி மாற்றப்பட்டு மார்ச் 1ம் தேதி நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. நிர்மலா சீதாராமன் மிகவும் அருமையான பட்ஜெட்டை போட்டு உள்ளார்கள். நெல்லை மாவட்டத்தில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுகிறது. பினராய் விஜயன் தமிழகத்தில் கழிவுகளை கொண்டு வந்து கொட்டிக்கொண்டு வருகிறார்.பாராளுமன்றத்தில் நடிகர் கமலஹாசன் தமிழை வைத்து பிழைக்கிறோம் என பேசி. இருக்கிறார். தமிழை வைத்து பிழைப்பது அவர்களின் கூட்டணி கட்சியினர் தான்.


பாஜகவினரை பொருத்தமட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக இருப்பதாக கூறுகிறார்கள். நெல்லையில் சிறுபான்மையினருக்கான மாநில மாநாடு நடைபெற இருக்கிறது. நடிகர் விஜய்க்கு வரி ஏய்ப்பு செய்ததாக 1.5  கோடி நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. அவர் வரியைப் ஏய்ப்பு செய்ததாக நீதிமன்றம் கூறி இருக்கிறது.  இப்போதுதான் அவருக்கு விசில் அடிக்க ஆரம்பித்திருக்கிறது. இனிமேல் தான் நாங்கள் எல்லாம் சேர்ந்து ட்ரம் அடிப்போம். எய்ம்ஸ் மருத்துவமனையில் எல்லா பணிகளும் முடிவடைந்த சூழ்நிலை இருக்கிறது. பிரதமர் மோடி சென்று பார்வையிட வாய்ப்பு இருக்கிறது” என்றார்.