இந்திய கம்.,கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு 97வது பிறந்தநாள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து..

 
நல்லக்கண்ணு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பிறந்தநாளையொட்டி, தமிழக முதல்வர் மு,க.ஸ்டாலின்  நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு ஐயா இன்று (டிச 26)  தனது  97- வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி  சென்னை நந்தனத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு  தலைவர்கள் பலரும் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நல்லக்கண்ணு

1924 ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்தவர் நல்லக்கண்ணு.  சிறு வயதிலிருந்தே பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று வந்த நல்லக்கண்ணு 18 வயதில் இந்திய கம்மியூனிஸ்ட் கட்சியில்  இணைத்துக் கொண்டார். அந்த வயதில் தொடங்கி 97 வயதை தொட்டிருக்கும் அவர் அதே துடிப்புடன் சமூக பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.  13 ஆண்டுகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநில செயலாளர், 25 ஆண்டுகள் விவசாயிகள் சங்கத் தலைவர், தேசிய நிர்வாகக் குழு உறுப்பின்ர் என பல பதவிகளை வகித்த நல்லக்கண்ணு,   இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த போது 7 ஆண்கள் சிறை வாசம் அனுபவித்தார்.

நல்லக்கண்ணு

இன்று அரசியல் களத்தில் இருக்கும் தலைவர்களின் வயது, நல்லக்கன்ணு அவர்களின் அனுபவமாக இருக்கும்.. அந்த அளவிற்கு அரசியலில்  தலைமுறை கடந்து பல தலைவர்களைப் பார்த்தவர். இந்நிலையில் இன்று தனது 97 வது பிறந்தநாளைக் கொண்டாடும் நல்லக்கண்ணு ஐயா அவர்களுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்தார். சென்னையிலுள்ள சிபிஐ அலுவலகத்தில் அவரை சந்தித்த முதல்வர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்ததோடு, நல்லக்கண்ணு அவர்களுக்கு 97 வயது ஆனாலும், இன்னும் நாங்கள் அவரை இளைஞராகத்தான் பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.