பெரும் சோகம்! ஆற்றில் மூழ்கிய 3 மாணவர்கள் சடலமாக மீட்பு

 
namakkal namakkal

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தில் காவிரி ஆற்றில் மூழ்கி மாயமான 3 கல்லூரி மாணவர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் சிலர் ஒன்றாக காவிரி ஆற்றில் குளித்து மகிழ்வதற்காக சென்றுள்ளனர். இந்த நிலையில், ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த தனியார் கல்லூரி மாணவர்கள் வினீத், நந்தகுமார், சேக்பஷ்ரூல் சாதிக்  ஆகிய மூவரும் திடீரென நீரில் மூழ்கினர். அவர்களை எங்கு தேடியும் காணாததால் இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காணாமல் போன 3 கல்லூரி மாணவர்களையும் தீவிரமாக தேடினர். 

இந்த நிலையில், காவிரி ஆற்றில் மூழ்கி மாயமான 3 கல்லூரி மாணவர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். நீண்ட தேடுதலுக்கு பின் தனியார் கல்லூரி மாணவர்கள் வினீத், நந்தகுமார், சேக்பஷ்ரூல் சாதிக் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். கல்லூரி மாணவர்கள் 3 பேர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.