நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடை மாலை அலங்காரம்!

 
1 1

மார்கழி மாத அமாவாசை அன்று மூல நட்சத்திரத்தில் அனுமன் அவதரித்த நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். நடப்பாண்டுக்கான அனுமன் ஜெயந்தியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

இதனை தொடர்ந்து, 18 அடி உயரத்தில் உள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு ஒரு லட்சத்து 8 வடைமாலை சாற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனுமன் ஜெயந்தியையொட்டி நாமக்கலில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டம் கல்லுக்குழியில் ஆஞ்சநேயர் கோயிலில் மூலவருக்கு ஒரு லட்சத்து 8 வடை மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.