நாமக்கல் கிட்னி விவகாரம் - விசாரிக்க தனிக்குழு
நாமக்கல் கிட்னி விற்பனை விவகாரம், தனிக்குழு அமைத்து விசாரணை மாவட்ட மருத்துவ இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், குமாரப்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வரும் ஏழைத் தொழிலாளர்களின் சிறுநீரகங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகின. வேலைவாய்ப்பில்லாமல் வறுமையில் வாடும் எளிய மக்களிடமிருந்து சட்டவிரோதமாகக் கொள்ளையடிக்கப்படும் சிறுநீரகங்கள், ஆந்திரா, தெலங்கானா போன்ற அண்டை மாநிலங்களில் பல லட்ச ரூபாய் அளவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும், திமுக நிர்வாகி ஒருவர் இடைத்தரகராகச் செயல்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் கிட்னி விற்பனை விவகாரத்தில், தனிக்குழு அமைத்து விசாரணை மாவட்ட மருத்துவ இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் நாமக்கல்லில் நடந்த கிட்னி திருட்டு தொடர்பாக திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கிட்னி கொடையாளிகள் குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை இணை இயக்குநர்கள் விசாரணை மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


