மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நமீதாவுக்கு அனுமதி மறுப்பு... "இனி இந்த மாதிரி நடக்க கூடாது”

 
நமீதா

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கணவருடன் சாமிதரிசனம் செய்ய வந்த தன்னை தடுத்து நிறுத்தி, இந்து என்பதற்கான சான்றிதழை காட்டுமாறு கேட்டு அவமரியாதை செய்ததாக நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியுமான நமீதா குற்றஞ்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகை நமீதா, “என்னை பார்த்து இந்துவா? எனக் கேட்கின்றனர்.  கோவில் அதிகாரி ரொம்போ அசிங்கமா பேசிட்டாரு... என் குழந்தை பேர் கூட கிருஷ்ணா தான்.. அந்த அதிகாரி எப்படி என்ன கேக்கலாம்? இந்து சான்றிதழ் என ஒன்று இருப்பதாக இன்று காலை வரை எங்களுக்கு தெரியாது. இதுவரை எந்த கோயிலிலும் இந்து சான்றிதழ் கேட்டது கிடையாது. இதுபோன்று வேறுயாருக்கும் நடக்கக் கூடாது என்றுதான் நினைக்கிறோமே தவிர, அரசியலாக்க விரும்பவில்லை” என்றார்.

இதனிடையே முக்கிய பிரபலங்கள், வெளிநாட்டினர் தரிசனம் செய்ய வந்தவரிடம் விபரங்கள் கேட்கப்பட்டு இந்துவா என விசாரிப்பது வழக்கமான நடைமுறை, இந்துக்கள் அல்லாதோருக்கு கோயிலுக்குள் அனுமதி இல்லை என அறிவிப்பு பலகை உள்ளது. அதன்படியே நமீதாவிடம் விசாரித்து பின்னர்,  தரிசனத்திற்கு அனுப்பப்பட்டதாக கோயில் தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.