5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த விவகாரம் - நங்கநலூர் குளம் தற்காலிகமாக மூடல்

 
5 dead

சென்னை அருகே நங்கநல்லூரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது 5 பேர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக, அந்த குளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

சென்னை அருகே உள்ள நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது .இதனால் 25க்கும் மேற்பட்ட ஆலய அர்ச்சகர்கள் சாமியை குளத்தில் இறக்கி  குளிப்பாட்டியினர் .அப்போது  ஒரு அர்ச்சகர் குளத்தில் மூழ்கினார். அவரை காப்பாற்ற சென்றவர்கள் அடுத்தடுத்து நீரில் மூழ்கினர்.  இப்படி ஐந்து அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கோவில் திருவிழாவில் 5 அச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.   இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் தமிழக சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது இந்த நிலையில், தற்போது அந்த குளம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  உரிய பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளுக்கு பிறகு மீண்டும் அந்த குளம் திறக்கப்படும் என ஊராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.