நாங்குநேரி சம்பவம்: ஆறுதல் கூறிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

 
thangam thennarasu

நாங்குநேரியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் மற்றும் அவரது சகோதரியை , சக வகுப்பு மாணவர்களே அரிவாளால் கொடூரமாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சாதிய வன்மத்தால் நடத்த இத்தகைய கொடூர சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

tn

நாங்குநேரி பள்ளியில் சாதி ரீதியாக மாணவன் சின்னதுரைக்கு சில மாணவர்கள் தொல்லை கொடுத்து வந்த நிலையில்,  இதுகுறித்து ஆசிரியரிடம் புகார் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் சின்னதுரையின் வீடு புகுந்து அவரையும், அவரது தங்கையையும் சரமாரியாக அறிவாளார் வெட்டிய சம்பவம் தமிழ்நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பள்ளி மாணவர்களுக்கிடையே சாதி வெறி தற்போது தீவிரமாக இருப்பதாக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் சாதியை களைய  வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

thangam thennarasu

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவனை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் சபாநாயகர் அப்பாவு ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். நாங்குநேரி சம்பவம் தொடர்பாக மாணவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியபின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர்,  முதலமைச்சர் உத்தரவின் பேரில் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளோம் . முதலமைச்சர் மாணவன் சின்ன துரையின் தாயிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார்.  அவர்களுக்கு அனைத்து தேவையான உதவிகளையும்,  உயர் சிகிச்சையையும்  வழங்கப்பட்டு வருகிறது. மாணவர் தற்போது நலமுடன் உள்ளார். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் படிப்பில் தடை எதுவும் ஏற்படாமல் இருக்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.  தமிழ்நாடு அரசு என்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் .இந்த குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.